ஜோதிடத்தைப் பொறுத்தவரை 10ஆம் இடம் உத்தியோக ஸ்தானமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் 10ஆம் இடத்தின் அதிபதி 10இல் இருந்தால் அரசு வேலை கிடைக்கும் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.
அதேபோல் 10 இடத்து அதிபதி சூரியனுடன் சேர்க்கை பெற்றிருந்தாலும், சூரியனின் நட்சத்திரத்தில் அமர்ந்திருந்தாலும் அரசு உத்யோகம் பெறலாம். அதற்கடுத்தபடியாக 10ஆம் இடத்தில் குரு இருந்தால், மரியாதை தரும் அரசு பதவிகள் கிடைக்கும்.
ஆனால் முக்கியமாக லக்னாதிபதி நன்றாக அமைந்தால்தான், அரசு உத்தியோகம் கூட தடையின்றி அமையும் வாய்ப்பு கிடைக்கும். இதேபோல் லக்னாதிபதியை விட 3ஆம் இடத்து அதிபதி நன்றாக அமைந்திருந்தால் அவர் சொந்தத் தொழிலில் கொடிகட்டிப் பறப்பார்.
மேலும், 3ஆம் இடத்து அதிபதியும், 10ஆம் இடத்து அதிபதியும் சேர்ந்திருந்தால் அந்த ஜாதகர் சிறிது காலம் அரசு பணியில் இருந்து விட்டு, அதன் பின்னர் அதிலிருந்து விலகி அரசு சம்பந்தமான தொழில்களை (கான்ட்ராக்ட்) நடத்தி பொருள் ஈட்டுவார்.
ஒரு சிலருக்கு மேற்கூறிய பலன்கள் அவர்களின் ஜாதகத்தில் காணப்பட்டாலும், அவருக்கு அரசு உத்தியோகம் கிடைக்காது. இதற்கு காரணம் சூரியனுக்கு எதிரான கிரகங்களின் தசா புக்தியே அவருக்கு நடந்து கொண்டிருக்கும்.
மேலும் சில ஜாதகங்களில் செவ்வாயின் கிரக நிலையும் அரசுப் பணியை நிர்ணயிக்கும் சக்தி வாய்ந்ததாக அமையும். எனவே மேற்கூறிய அனைத்து அம்சங்களையும் முழுமையாக அலசி ஆராய்ந்த பிறகே ஒருவருக்கு அரசு உத்தியோகம் கிடைக்குமா என்பதைப் பற்றிக் கூற முடியும்.
கணினி துறையில் சாதிக்கும் ஜாதக அமைப்பு யாருக்கெல்லாம் உண்டு?
கணினி துறைக்கு உரிய கிரகம் சனி. அந்த வகையில் ஒருவரது ஜாதகத்தில் சனி பகவான் சிறப்பாக இருந்தால் அவர் கணினித் துறையில் சாதிப்பார் என்று கொள்ளலாம்.
அதற்கடுத்தபடியாக சனியின் நட்பு கிரகங்களான சுக்கிரனும், புதனும் வலுவடைந்து இருந்தால் கணினித் துறையில் சிறப்பான முன்னேற்றத்தை பார்க்கலாம். குறிப்பாக 10ஆம் இடம் (உத்யோக ஸ்தானம்); 3வது இடத்தில் (முயற்சி ஸ்தானம்) ஆகியவற்றில் சனி, சுக்கிரன், புதன் இருந்தால் அல்லது 10ஆம் வீட்டிற்கு உரிய கிரகத்துடன் சுக்கிரன், சனி, புதன் நல்ல விதத்தில் தொடர்பு பெற்றிருந்தாலோ அவர்கள் கணினித் துறையில் சாதனை படைப்பர்.
இத்துடன், மின்னணு துறைக்கு உரிய கிரகமான ராகுவும் அவரது ஜாதகத்தில் சுபத்தன்மை பெற்றிருந்தால் கணினித் துறையில் அவர் நம்பர்-1 ஆக விளங்குவார்.
சில குறிப்பிட்ட கைரேகை அமைப்பைப் பெற்றவர்கள் எதிர்காலத்தை கணிக்கும் சக்தி படைத்தவர்களாகத் திகழ்வார்கள் என சில கைரேகை தொடர்பான நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது பற்றி விளக்குங்கள்?
பதில்: எதிர்காலத்தை அறியக் கூடியவர்களின் கையில் சாலமன் ரேகை (அல்லது) சக்தி ரேகை இருக்கும் என கைரேகை அறிஞர்கள் கூறியுள்ளனர். ஆள் காட்டி விரல் குரு பகவானுக்கு உரியது. அந்த விரலுக்கு கீழ் உள்ள மேடு “குரு மேடு” என்று அழைக்கப்படுகிறது.
குரு மேட்டில் நேர் ரேகைகள் (ஒன்றுக்கு மேற்பட்ட) இருந்தாலோ, முக்கோணக் குறியீடு இருந்தாலோ, நட்சத்திரக் குறியீடு இருந்தாலோ அவர்கள் முக்காலத்தையும் உணரக் கூடிய ஆற்றல் பெற்றவர்களாக இருப்பார்கள் என கைரேகை சாஸ்திரம் கூறுகிறது.
இதேபோல் உள் செவ்வாய் மேடு மற்றும் சந்திர மேடு ஆகியவை முடிவடையும் இடத்தில் நட்சத்திரக் குறியீடு அல்லது நாற்கரக் குறியீடு இருந்தாலும் அவர்களுக்கு
ஒரு சிலர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தாலும், மிகவும் கஷ்டப்பட்டு மேற்படிப்பை முடித்து விடுகின்றனர். ஆனால் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தாலும் சிலர் 5ஆம் வகுப்பைக் கூட தாண்டாமல் பள்ளியை விட்டு வெளியேறி விடுகின்றனர். தரமான கல்வி கிடைப்பதற்கு ஏதாவது ஒரு வகையில் ஜாதக அமைப்பு காரணமாகிறதா?
பதில்: ஒருவரது ஜாதகத்தில் வாக்கு ஸ்தானம் (2ஆம் இடம்) நன்றாக இருந்தால் ஏழ்மை நிலையிலும் அவருக்கு தரமான கல்வி கிடைக்கும். இதனை அனுபவ ரீதியாக பலர் தங்கள் வாழ்க்கையில் பார்த்திருக்க முடியும். உதாரணமாக, ஏழ்மை நிலையில் உள்ள மாணவனின் கல்வி தடைபடாமல் தொடர, அவனது வகுப்பு ஆசிரியரே கல்விக்கான செலவுகளை ஏற்றுக் கொள்வார்.
ஜோதிடத்தைப் பொறுத்தவரை 2ஆம் இடம் வாக்கு ஸ்தானத்தை மட்டுமின்றி ஆரம்பக் கல்வியையும் குறிக்கிறது. அதற்கு அடுத்தபடியாக 4ஆம் இடம் உயர் கல்வியையும், 9ஆம் இடம் மேல்நிலைக் கல்வியையும் (கல்லூரி, பல்கலைக்கழகம்) குறிக்கிறது.
இதுமட்டுமின்றி 5ஆம் இடம்தான் மனதைக் குறிக்கிறது. படிக்கும் பாடங்களை ஒருவர் நன்றாக மனதில் பதியவைத்துக் கொள்வதற்கு உதவுவது இந்த 5ஆம் இடம். ஒருவருக்கு 5ஆம் இடம் சிறப்பாக இருந்தால்தான் கல்வியில் ஈடுபாடு அதிகரிக்கும். நினைவாற்றல் நன்றாக இருக்கும். தேர்விலும் அதிக மதிப்பெண் பெற முடியும்.
படிக்கும் காலத்தில் ராகு தசை, ஏழரைச் சனி, அஷ்டமச் சனி வந்தால் அந்த மாணவர், மாணவியின் வாழ்வில் சூறாவளி வீசத் துவங்கிவிடும். எனவே, பெற்றோர் தங்களின் வாரிசுக்கு ராகு தசை நடக்கும் காலத்தில் அவர்கள் மீது படிப்பைத் திணிக்காமல், அவர்களின் பிரச்சனைகளை, இடையூறுகளைப் புரிந்து கொண்டு கல்வி புகட்ட வேண்டும். சில மாணவ, மாணவிகளுக்கு பாலியல் சித்ரவதைகள் கூட ஏற்படலாம்.
ஒருவருக்கு தரமான கல்வி கிடைப்பதை சாதாரண விடயமாக கருதக் கூடாது. அதற்கு கிரகங்களின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம். பிறக்கும் போது உள்ள கிரக அமைப்பு, தற்கால் கிரக நிலைகள் ஆகிய இரண்டும் சிறப்பாக இருந்தால் மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெறும் மாணவராகத் திகழ முடியும்.
சிறு வயது முதலே கற்பூரம் போன்ற புத்தியுடன் காணப்படும் மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுகின்றனர். ஆனால், ஒரு சில மாணவர்கள் சிறுவயதில் நன்றாக படிக்காத போதும், குறிப்பிட்ட வயதிற்குப் பின்னர் புரிந்து கொண்டு பயிலும் ஆற்றலைப் பெற்று மேற்படிப்பு, ஆராய்ச்சிப் படிப்பில் முத்திரை பதிக்கின்றனர். இந்த இரு தரப்பு மாணவர்களையும் ஜோதிட ரீதியாக அணுகுவது எப்படி?
பதில்: புகழ்பெற்ற கல்லூரியில் துறைத் தலைவராகப் பணியாற்றும் பெண்மணி சமீபத்தில் என்னைப் பார்க்க வந்திருந்தார். அவருக்கு 2 மகன்கள். அதில் மூத்த மகனின் ஜாதகத்தைப் பார்த்ததில் அவர் புத்தகப் புழுவாக இருப்பார் என்பது தெரியவந்தது. இளைய மகனின் ஜாதகத்தைப் பார்த்ததில் (மோசமான தசா புக்தி நடந்து கொண்டிருந்தது) அவர் தேர்வுத் தேதி அறிவித்த பின்னரே புத்தகத்தை கையில் எடுக்கும் ரகம் எனத் தெரிந்து கொண்டேன்.
பின்னர் அந்தப் பெண்மணியிடம் பேசிய நான், உங்கள் இளைய மகனைக் காட்டிலும், மூத்த மகன் சற்று அதிகம் படிப்பது போல் தோன்றினாலும், இளைய மகனுக்கு உள்ள அறிவாற்றல் (ஐ.கியூ) மூத்த மகனுக்கு இருக்காது என்றேன். ஆனால் அதனை ஏற்றுக்கொள்ள அவர் மறுத்து விட்டார். இளைய மகனை விட மூத்த மகன் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுகிறார் என்பதே அவர் கூறிய காரணம்.
அறிவாற்றலையும், கல்வி பயிலுவதையும் ஒன்றாகப் பார்க்கும் மனோபாவத்தை பெற்றோர் தவிர்க்க வேண்டும். உளவியலாளர்கள், கல்வியாளர்களைப் பொறுத்தவரை, மீத்திரக் குழந்தைகள் (Gifted Childrens) என்று ஒரு சில குழந்தைகளைக் குறிப்பிடுகின்றனர்.
ஆசிரியர், புத்தகம், கைடு ஆகியவற்றின் துணையுடன் பாடத்தை புரிந்து கொள்ளும் தன்மை உள்ளவர்களே மீத்திரக் குழந்தைகள். ஆனால் இவர்கள் எல்லோருக்கும் அறிவாற்றல் அளவு அதிகமாக இருக்காது. ஒரு சிலருக்கு வேண்டுமானால் இருக்கலாம்.
பொதுவாக ஐ.கியூ அதிகமுள்ள குழந்தைகள் பாடத்தில் முழுமையாக கவனம் செலுத்த மாட்டார்கள். ஆசிரியர்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், பதில் கேள்வி எழுப்புவர்.
லக்னாதிபதி லக்னத்தில் இருந்து, வாக்கு அதிபதி வாக்கு ஸ்தானத்தில் இருப்பது போன்ற அமைப்பைப் பெற்ற குழந்தைகளுக்கு, நல்ல தசாபுக்தி நடைபெறும் போது நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை எளிதாகப் பெறுவார்கள். தடைகள் ஏற்படாது.
நல்ல மதிப்பெண் பெற்றதால் புகழ்பெற்ற கல்லூரியில் மேற்படிப்பு. அங்கிருந்து சிறந்த நிறுவனத்தில் நல்ல சம்பளத்திற்கு பணியில் சேரும் இவர்கள், தங்களின் வாழ்க்கையை சுருக்கிக் கொள்கின்றனர். இவர்களில் சிலருக்கு வாழ்வில் ஏதாவது ஒரு சிறிய பிரச்சனை ஏற்படும் போது அதனை தீர்க்க முடியாமல் அவதிப்படுகின்றனர். சிலருக்கு வாழ்க்கையே சின்னாபின்னமாகி விடுகிறது.
ஐ.கியூ. அதிகமுள்ள மாணவர்கள் படிப்பில் சுமாராக இருந்தாலும், குறிப்பிட்ட பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுப்பார்கள். அதற்கு காரணம் சம்பந்தப்பட்ட பாடத்தை நடத்தும் ஆசிரியர் பயிற்றுவிக்கும் முறை வித்தியாசமானதாக, அந்த மாணவருக்கு பிடித்தமான முறையில் இருக்கும்.
கல்வியில் கூட தங்கள் வாழ்க்கைக்குத் தேவையான விடயங்களில் மட்டுமே அதிக கவனம் செலுத்துவர். எனவே ஐ.கியூ அதிகமுள்ள மாணவர்கள் தங்கள் வாழ்வில் கஷ்டங்கள் ஏற்பட்டாலும் அதனை சமாளிக்கும் மனப்பக்குவத்தைப் பெற்றவர்களாக இருக்கிறார்கள்.
கல்வி என்பது மனம் தொடர்பானது. எனவே, மாணவர்களை கல்வி கற்கும் சூழலுக்கு ஆசிரியர்கள் முதலில் ஊக்கப்படுத்தி தயார்படுத்த வேண்டும். எனினும் ஒவ்வொரு மாணவனின் ராசி, நட்சத்திரம், தசா புக்தி என்ன என்பதை தெரிந்து கொள்ள முடியாது.
பெற்றோர்தான் தங்களது மகன், மகளுக்கு என்ன தசாபுக்தி நடக்கிறது என்று கருத்தில் கொண்டு அவர்களுக்கு தேவையான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும்
ஒரு கரு உருவாகும் போது அதில் டி.என்.ஏ., ஆர்.என்.ஏ போன்ற அடிப்படை மூலக் கூறுகளை பெற்றோரின் மரப்புக்கூறில் இருந்து கருவுக்கு கடத்துவது 5ஆம் இடம் மற்றும் அதற்கு உரிய கிரகமாகும். எனவே, ஒருவர் ஜாதகத்தில் 5ஆம் இடம் நன்றாக இருக்க வேண்டும்.
ஐந்தாம் அதிபதி நன்றாக இருந்தால் முன்னோர்கள் சேர்த்து வைத்த சொத்து, கௌரவம், பாரம்பரியத்தை அந்த ஜாதகர் காப்பாற்றுபவராகவும், முன்னோர்களின் சொத்தை வைத்து முன்னுக்கு வருபவராகவும் இருப்பார்.
ஒருவரின் ஜாதகத்தில் 5ஆம் இடம் பலவீனமாக இருந்தாலும், லக்னாதிபதி நன்றாக இருந்தால் தனது முயற்சியால் வாழ்க்கையில் அவர் முன்னேறுவார். ஆனால் ஒருமுறை முயன்றால் இவர்களுக்கு வெற்றி கிடைக்காது. பலமுறை முயற்சிக்க வேண்டும்.
லக்னாதிபதி நன்றாக இருந்து (ஆட்சி, உச்சம் பெறுதல்), நீச்சம் பெறாமல் பரிவர்த்தனை யோகம் பெற்றிருந்தால் அவருக்கு வீரம், விவேகம் ஒருசேர இருக்கும்.
ஜோதிடத்தைப் பொறுத்தவரை சண்டை, சச்சரவுகளை உருவாக்கக் கூடியது 6ஆம் இடமாகும். ஒருவர் ஜாதகத்தில் 6க்கு உரியவன் பலவீனம்/மறைந்து இருந்தால், அவர் சண்டை, சச்சரவில் ஈடுபட மாட்டார்.
ஆறுக்கு உரியவர் 6இல் (வலுவாக) இருந்தால் அந்த ஜாதகர் எப்போதும் சண்டையிட்டுக் கொண்டிருப்பார். ஏதாவது ஒரு பிரச்சனையைக் கிளப்புவார். நேரடியாக சண்டையில் இறங்காவிட்டாலும், மற்றவர்களை தூண்டிவிட்டு கலகம் ஏற்படுத்துவர். கடன் தொல்லையும் ஏற்படும்.
ஜோதிடத்தைப் பொறுத்தவரை ஒரு மனிதன் எத்தனை பிறவி எடுப்பார் என்பதை கணிப்பது பற்றி முந்தைய பதில்களில் கூறியிருந்தீர்கள். ஒருவர் தனது கடைசிப் பிறவியை எடுக்கும் போது அவரது வாழ்க்கை நிலை எப்படி இருக்கும்.
அதாவது ஆசைகளுக்கு அடிபணியாமல், திருமணம் செய்து கொள்ளாமல் துறவறம் பூண்டு பிற உயிர்களின் நன்மைக்காகவே அவர் வாழ்க்கை நடத்துவாரா?
பதில்: ஜோதிடத்தில் தற்போது 9 கிரகங்கள் (நவகிரகங்கள்) உள்ளன. ஆனால் முற்காலத்தில் 7 கிரகங்கள் மட்டுமே இருந்ததாக சங்க கால நூல்கள் கூறுகின்றன. அதன் பின்னர் கேது, ராகு ஆகிய 2 நிழல்/சாயா கிரகங்கள் ஜோதிடத்தில் இடம்பெற்றதாக வரலாறு கூறுகிறது. அறிவியல் ஆய்வாளர்கள் இதனை சூரிய கரும்புள்ளி (கேது), சந்திரக் கரும்புள்ளி (ராகு) என்று கூறுகின்றனர்.
ஒருவர் ராகுவின் ஆதிக்கத்தில் தனது கடைசிப் பிறவியை முடித்துக் கொள்கிறாரா? அல்லது கேதுவின் ஆதிக்கத்தில் முடித்துக் கொள்கிறாரா? என்பதை முதலில் ஜோதிட ரீதியாக கணிக்க வேண்டும்.
ராகுவின் ஆதிக்கத்தில் அல்லது ராகுவின் நட்பு கிரகங்களான சுக்கிரன், சனி ஆகியவை யோக நிலையில் இருந்து மோட்ச ஸ்தானமும் வலுவாக அமைந்து இறுதிப் பிறவியை அவர் முடித்துக் கொள்பவராக இருந்தால், அவருக்கு அனைத்து சுகபோகங்களையும் அனுபவிக்கும் வாய்ப்பு கிடைக்கும். உணவு, உடை, வாகனம், மனைவி, குழந்தை, வசதி வாய்ப்பு ஆகியவற்றை அனுபவித்த பின்னரே அவர் முக்தி அடைவார்.
ஆனால் கேதுவின் ஆதிக்கத்தில் முக்தி அடைபவரின் வாழ்க்கை நிலை இதற்கு நேர்மாறாக இருக்கும். அதாவது, சிறுவயதில் இருந்தே துறவறம் எய்துதல், பள்ளிப் பருவத்திலேயே காவி உடை அணிவது போன்றவை அவருக்கு நிகழும். திருமணம் செய்து கொண்டாலும் குழந்தை பாக்கியம் கிடைக்காமல் போகலாம். குழந்தை பிறந்தாலும், அவர்களால் அவஸ்தைப்பட்டு அதன் பின்னர் முக்தி அடைய நேரிடும்.
எனவே, ஒருவரின் ஜாதகத்தை முழுமையாக கணித்த பின்னரே அவரின் இறுதிப்பிறவி எப்படி இருக்கும் எனக் கூற முடியும்.
பொதுவாக சனி/செவ்வாய்/ராகு/கேது ஆகியவற்றில் ஏதாவது ஒன்று லக்னத்தில் இருந்தால் அவரது முகத்தில் சிடுசிடுப்பு காணப்படும். குறிப்பாக செவ்வாய் லக்னத்தில் இருந்தால் மூக்கிற்கு மேல் கோபப்படுபவராக இருப்பார்.
லக்னத்தில் சூரியன் இருந்தாலும் அவரது கோபம் சுட்டெரிக்கும் வகையில் இருக்கும். ஆனால் நியாயமான விடயத்திற்கு மட்டுமே கோபம் வரும். லக்னத்தில் சனி இருந்தால் அவருக்கு அசட்டுத்தனமான கோபம் இருக்கும். ஆனால் அவரது மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பதை முக பாவனையில் இருந்து அறிய முடியாது.
லக்னத்தில் சுக்கிரன், குரு, புதன், வளர்பிறை சந்திரன் அமர்ந்திருந்தால் அவர்கள் எப்போதும் சிரித்த முகத்துடன் காணப்படுவார்கள். சிலருக்கு லக்னத்தில் சனி இருந்தாலும், நல்ல நிலையில் உள்ள குரு (வக்ரம், நீச்சமடையாத, பாவிகள் சேர்க்கை பெறாத) அந்த சனியைப் பார்த்தால் அவர்கள் எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பார்கள். எதிரில் இருப்பவர் பைத்தியம் என்று நினைக்கும் அளவுக்கு சிரிப்பார்கள்.
மேலும் 5, 9வது இடத்திற்கு உரிய கிரகங்கள் லக்னத்தில் இருந்தாலும் அந்த ஜாதகர் சிரித்த முகத்துடன் இருப்பார். ஏனென்றால் 5ஆம் இடம் ஒருவரின் மனப்பான்மையை குறிக்கும். ஒருவரின் ஜாதகத்தில் 5க்கு உரியவர் லக்னத்தில் இருந்தால் அவர் பலவற்றையும் அலசி ஆராய்ந்து தெளிவான முடிவெடுப்பவராகவும், கோபத்தை எளிதில் வெளிப்படுத்தாதவராகவும், எப்போதும் மலர்ந்த முகத்துடன் இருப்பார்.
சிரித்த முகம், சிடுமூஞ்சி ஆகியவற்றைப் பற்றி மட்டுமல்லாமல், உடலமைப்பு, குணம் ஆகியவற்றைப் பற்றியும் சங்க கால ஜோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளது.
சூரிய மண்டலத்தில் உள்ள கோள்களில் ஒன்றான சனியைச் சுற்றி புதிய வளையத்தைக் கண்டறிந்துள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வுக் கழகமான நாசா ஒரு சில நாட்களுக்கு முன் அறிவித்தது.
சனியைச் சுற்றில் பல வளையங்கள் இருப்பது ஏற்கனவே தெரிந்ததுதான் என்றாலும், தற்போது நாசா கண்டறிந்துள்ள வளையம் சனியைச் சுற்றி உள்ள வளையங்களில் மிகப் பெரியதாகும்.
அதன் அளவைக் கணக்கிட்டு கூறுவதற்காக நாசா தெரிவித்துள்ள உவமை என்னவென்றால், புதிதாக கண்டறியப்பட்டுள்ள பிரம்மாண்ட வளையத்திற்குள் சுமார் ஒரு பில்லியன் பூமிகளை அடக்கிவிட முடியும்.
ஜோதிடத்தில் இந்த வளையங்கள் பற்றி என்ன கூறப்பட்டுள்ளது. குறிப்பாக பிரம்மாண்ட வளையம் இருப்பது பற்றி ஏற்கனவே கூறப்பட்டுள்ளதா? அல்லது இந்த வளையத்தைக் கண்டறிந்தது வானியல் ஆராய்ச்சியில் மட்டுமின்றி ஜோதிடத்திலும் புதிய அத்தியாயத்தை துவக்குமா?
பதில்: நவகிரகங்களிலேயே சனி மிகவும் வலுவான கிரகம். அதனால்தான் அதனை ராஜகிரகம் என்று அழைக்கிறார்கள். மக்களிடையே சனிப்பெயர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவதற்கும் இதுவே காரணம்.
அறிவியல் ரீதியாகப் பார்த்தால் சனி கிரகத்தைச் சுற்றிப் பல துணைக் கோள்கள் இருக்கின்றன. அதுமட்டுமின்றி கரு வளையத்திற்குள் சனி இருப்பதை பல சித்தர்கள் அறிந்து வைத்திருந்தனர்.
ஒருவரது ஜாதகத்தில் சனி சிறப்பாக இல்லாமல் இருந்து அவர்களுக்கு ஏழரைச் சனி, அஷ்டமத்து சனி, ராகு தசையில் சனி புக்தி, சனி தசையில் ராகு புக்தி நடப்பவர்களுக்கு கண்ணுக்கு கீழ் கருவளையம் அல்லது கன்னக் கதுப்புகளில் கருப்பு புள்ளிகள்/திட்டுகள் உருவாகும் என சாமுத்ரிகா லட்சணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சனியைச் சுற்றி வளையங்கள் இருப்பதால், தனது ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்களிடமும் அதனை அது பிரதிபலிக்கிறது. சனியின் நிறம் கருப்பு (கும்பம்) என்று ஜோதிடம் கூறுகிறது. அதேபோல் நீல நிறமும் (மகரம்) சனிக்கு உரியதே.
கருப்பு, நீல நிற வளையத்திற்குள் சனி இருப்பது ஏற்கனவே கண்டறியப்பட்டு விட்டாலும், இனி வரும் காலங்களில் அறிவியல் அறிஞர்கள் சனியைச் சுற்றி மேலும் பல வளையங்களை கண்டறிவர்.
பல வளையங்களுக்கு நடுவில் இருப்பது சனி கிரகம். இதனை உணர்த்தும் விதமாக சனியின் ஆதிக்கத்தில் இருப்பவர்களைச் சுற்றி எப்போதும் ஒரு வளையம் இருந்து கொண்டே இருக்கும். அவர்கள் அரசியல்வாதியாக இருந்தாலும், சிறைக் கைதியாக இருந்தாலும் அவர்களைச் சுற்றி பாதுகாப்பு வளையம் இருக்கும். ஒருவர் ஜாதகத்தில் சனி எந்த நிலையில் இருக்கிறார் என்பதைப் பொறுத்தே அவர்களின் வாழ்வு இருக்கும்.
தற்போது சிம்மத்தில் இருந்து கன்னிக்கு சனி பெயர்ச்சியாகியுள்ளார். கன்னி புதனின் வீடு என்பதால், சனியைப் பற்றிய பல தெரியாத விடயங்கள் வெளிச்சத்திற்கு வரும். எனவே சனி கிரகத்தைப் பற்றி மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்பது நிச்சயம்

ஜோதிடத்தில் ஏக தார (ஒரே மனைவி) ஜாதகங்கள், பல தார (பல மனைவிகள்) ஜாதகங்கள் உண்டு. ஒரு சிலர் முதல் திருமணம் முடித்தவுடன் அடுத்த ஆண்டே மீண்டும் ஒரு திருமணம் செய்து கொள்வர். இவர்களுக்கு ஒரு திருமணத்தால் மனத்திருப்தி ஏற்படாது.
சமீபத்தில் என்னிடம் இதுபோன்றதொரு ஜாதகம் (பல மனைவிகள் உடையவர்) வந்தது. அவருக்கு மேஷ லக்னம், மேஷ ராசி, அஸ்வினி நட்சத்திரம். அவருக்கு லக்னத்திலேயே ஆண் கிரகங்களான குரு, செவ்வாய் வலுவாக இருந்தது. சந்திரனும் சேர்க்கை பெற்றிருந்தார்.
அவருக்கு செவ்வாய் லக்னாதிபதி. அது லக்னத்திலேயே இருப்பதாலும், குருவும் லக்னத்தில் உள்ளதாலும் அவர் ஒழுக்கத்தில் சிறந்து விளங்க வேண்டும். மேலும், 4ஆம் அதிபதியான சந்திரனும் லக்னத்திலேயே 2 யோக கிரகங்களின் சேர்க்கை பெற்றுள்ளதால் அவர் ஒழுக்க சீலராக விளங்க வேண்டும்.
மேலோட்டமாகப் பார்த்தால் இவருடையது மிக சிறப்பான ஜாதகம். மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்து முன்னேறி செல்வாக்கான நிலையை அவர் எட்டியிருந்ததால் தற்போது அவருக்கு காசு, பணத்தில் குறையில்லை.
ஆனால் லக்னத்தில் உள்ள செவ்வாய், குரு, சந்திரனின் சேர்க்கையை, 11ஆம் இடத்தில் உள்ள சனி (பாதகாதிபதி) பார்த்ததால், அவருக்கு காம இச்சை அதிகரித்துவிட்டது. இதனால் அவருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகள் உருவாகினர். இன்றைய தேதியில் அவருக்கு 3 மனைவிகளும், 6 குழந்தைகளும் உள்ளனர். இதுமட்டுமின்றி வேறு சில பெண்களிடமும் அவருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளதை அவரே ஒப்புக்கொண்டார்.
அவரது ஜாதகத்தில் போகஸ்தானத்திற்கு உரிய கிரகமான புதன், தனக்கு 12இல் மறைந்து சூரியனுடன் சேர்ந்துவிட்டார். இதனால் இவருக்கு போகம் தொடர்ந்து கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சுக்கிரனுடன், ராகு இருந்ததால் (3வது வீட்டில்) நீண்ட நேரம் கலவி புரியும் ஆற்றலும் அவருக்கு இருந்ததை ஒப்புக்கொண்டார்.
மேலும், தன்னை விரும்பி ஏற்றுக்கொள்ளும் பெண்களுடன் மட்டுமே தாம் தொடர்பு வைத்துக் கொள்வதாகவும், தாமாக யாரையும் பலவந்தப்படுத்துவதில்லை என்றும் தனது தரப்பு நியாயத்தைக் கூறினார்.
அவர் காமத்தில் மிகுந்த நாட்டம் உள்ளவராக இருந்தாலும், லக்னத்தில் சுபகிரகங்கள் இருப்பதால், விருப்பமில்லாத பெண்களுக்கு அவர் பாதிப்பு ஏற்படுத்துவதில்லை. இப்படி ஒருபுறம் நல்ல மனிதராகவும், மறுபுறம் பல பெண்களுடன் தொடர்புள்ளவராகவும் அவர் வாழ்க்கை நடத்தி வந்துள்ளார்.
தற்போது 45 வயதைக் கடந்து விட்ட அவருக்கு இனி வரும் காலங்கள் சிறப்பாக இல்லை என்பதையும், பெண்கள் விடயத்தில் அவர் இனியும் கவனமாக இல்லாவிட்டால், பெண் பிரச்சனையால் நீதிமன்றத்தில் வழக்குகளைச் சந்தித்து அவமானப்படுவதுடன், தனது சொத்துக்களையும் இழக்க நேரிடும் என ஆலோசனை கூறி அனுப்பினேன்

தற்போதைய வாழ்க்கையில் நல்ல காரியங்களை செய்து, பாவங்களை தவிர்த்தால், அடுத்த ஜென்மத்தில் சிறப்பான வாழ்க்கை அமையும் என்று சிலர் கூறுகின்றனர். இதனை ஜோதிடம் எப்படிப் பார்க்கிறது?
பூர்வ ஜென்மம், தற்போதைய ஜென்மம், அடுத்த ஜென்மம் ஆகியவற்றை உணர்த்துவதே ஜாதகம்/ஜோதிடத்தின் பிரதான கொள்கை. நவகிரகங்களும் இதைத்தான் உணர்த்துகின்றன.
ஊழ்வினை பற்றி வள்ளுவரை குறிப்பிட்டுள்ளார். ஜோதிடத்தைப் பொறுத்த வரை சனிதான் ஊழ்வினைக் கோள். அது எந்தவீட்டில் இருக்கிறது, எந்த கிரகத்துடன் சேர்ந்துள்ளது, எந்த நட்சத்திரத்தில் அமர்ந்துள்ளது என்பதைப் பொறுத்தே அந்த ஜாதகர் தன் வாழ்வில் கிடைக்கும் யோகங்களை தடையில்லாமல் அனுபவிப்பாரா? என்பதைக் கூற முடியும்.
ஊழ்வினைக் கோளை வைத்துதான் முற்பிறவி, தற்போதைய ஜென்மம், மறுஜென்மம் ஆகியவற்றைக் கணிக்க முடியும். ஒரு சிலர் 4 பங்களா வைத்திருந்தாலும், அதனை அனுபவிக்க முடியாமல் வாடகை வீட்டில் வசிப்பார்கள். இது ஊழ்வினைப் (முன் ஜென்மத்தில் செய்த பாவம்) பயன்.
பெரும்பாலான பெண்கள்/ஆண்களின் திருமணத்தில் பெரும் தடையாக செவ்வாய் தோஷம் கருதப்படுகிறது. ஆனால் இந்த தோஷம் எப்படி ஏற்படுகிறது என்று நம்மில் பலருக்கு ஜோதிட ரீதியாக தெரிவதில்லை.
செவ்வாய் தோஷம் குறித்து ஒரு கூட்டத்தில் என்னைப் பேசும்படி அழைத்திருந்தார்கள். அதில் பேசிய நான், சகோதரத்துவத்திற்கும், பூமிக்காரகனாகவும் செவ்வாய் விளங்குகிறார். எனவே, முற்பிறவில் சகோதர/சகோதரிகளுக்கு துரோகம் செய்தவர்கள், அடுத்தவர் சொத்துக்களை அபகரித்தவர்களுக்கு இந்த ஜென்மத்தில் செவ்வாய் தோஷம் இருக்கும்.
மற்றவர்களின் உழைப்பில் (ரத்தம்) குளிர் காய்ந்தவர்களுக்கும் கடுமையான செவ்வாய் தோஷம் ஏற்படும். குறிப்பிட்டுக் கூற வேண்டுமென்றால் 7, 8வது இடத்தில் செவ்வாய் அமர்வதால் திருமணம் தள்ளிப்போகும். இளமை முடியும் தருவாயில், காலம் கடந்த நிலையில் திருமணம் கைகூடும். இதுதான் செவ்வாய் தோஷம் என்று கூறினேன்.
எனவே, அடுத்த பிறவியில் செவ்வாய் தோஷம் ஏற்படக் கூடாது என்று விரும்புபவர்கள், இந்த ஜென்மத்தில் தன்னுடைய சகோதர/சகோதரிகளுக்கு தீமை செய்யாமல், சொத்துக்களை ஏமாற்றிப் பறித்துக் கொள்ளாமல் இருந்தாலே போதும். முடிந்த வரை அவர்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடுங்கள்; இல்லாவிட்டால் ஒதுங்கி நில்லுங்கள்; கெடுதல் செய்யக் கூடாது என்றும் அறிவுறுத்தினேன்.
இந்தப் பிறவியில் நல்ல காரியங்களை செய்து, தியாகங்கள் மூலமாக அடுத்து வரும் பிறவி, அடுத்து வரும் சந்ததி ஆகியவற்றை சிறப்பாக உருவாக்க நம்மிடமும் வாய்ப்புகள் உள்ளது. ஆனால் அதற்கும் ஜாதகத்தில் இடம் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு சில ஜாதகர்கள் நல்ல காரியம் செய்ய நினைத்தாலும், அவர்களுக்கு நடக்கும் மோசமான தசா புக்தி அதனைச் செய்ய விடாமல் தடுத்து விடுவதையும் பார்க்கிறோம். இதைத்தான் “அவன் சும்மா இருந்தாலும் அவன் சுழி சும்மா இருக்க விடாது” என்று பெரியவர்கள் கூறுவர்.
ஜோதிடத்தில் 9ஆம் எண்ணுக்கு உரிய கிரகம் செவ்வாய். அதேபோல் இரத்தினக் கற்களுக்கு உரிய கிரகம் சுக்கிரன். எனவே, ஜாதகத்தில் செவ்வாயும், சுக்கிரனும் நன்றாக இருப்பவர்கள் மட்டுமே நவரத்தினக் கற்கள் பதித்த மோதிரத்தை அணிய வேண்டும்.
இந்த 2 கிரகங்களில் ஏதாவது ஒன்று கெட்டுப்போய் இருந்தாலும் நவரத்தினக் கல் மோதிரத்தை அணிவதை அவர்கள் தவிர்த்து விட வேண்டும்.
இதேபோல் ஓப்பன் செட்டிங் உள்ள நவரத்தினக் கல் மோதிரத்தை அணியக் கூடாது. அது போன்ற அமைப்பு கொண்ட மோதிரத்தை அணிவதன் மூலம் தேவையில்லாத சிக்கல்கள் ஏற்படும்.
சமீபத்தில் என்னிடம் வந்த தம்பதிகளில், கணவரின் ஜாதகத்தைப் பார்த்த போது மிகச் சிறப்பாக இருந்தது. அதனை அவரிடம் கூறிய போது, அவர் நேர்மாறாக பதிலளித்தார். குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் அடிக்கடி ஏற்படுவதாகவும், அடுத்தடுத்து உடல்நிலை பாதிக்கப்படுவதாகவும் கூறினார்.
தொடர்ந்து பேசியதில் சமீபத்தில்தான் அவர் நவரத்தினக் கல் மோதிரம் அணிந்து கொண்டதை அவரது மனைவி தெரியப்படுத்தினார். அந்த மோதிரம் ஓப்பன் செட்டிங் கொண்டது. மீண்டும் ஜாதகத்தை அலசியதில் செவ்வாய் நீச்சமாகி சனியுடன் சேர்ந்து கடகத்தில் அமர்ந்திருந்தது. அதுமட்டுமின்றி சுக்கிரனும், சூரியனுடன் இணைந்து பலவீனமாகி இருந்தது.
இதையடுத்து நவரத்தின மோதிரத்தை கழட்டி விடுங்கள் என்று கூறினேன். இதைக் கேட்ட அவரது மனைவி மிகவும் மகிழ்ச்சியடைந்தார். காரணத்தைக் கேட்ட போது, அந்த மோதிரத்தை கணவர் அணிந்த நாள் முதல் வீட்டில் சண்டை, சச்சரவுகள் அதிகமாகி விட்டதாகவும், திருமணம் முடிந்து பல ஆண்டு கால வாழ்க்கையில் தன்னை கை நீட்டி அடிக்காதவர், மோதிரம் அணிந்த சில மாதங்களுக்கு உள்ளாகவே தன்னை நான்கைந்து முறை அடித்து விட்டதாக வருத்தத்துடன் கூறினார்.
இதன் பின்னர் பேசிய அவரது கணவர், மோதிரம் போட்டதற்கு பின்னர் தனது ரத்த அழுத்தம் அபரிமிதமாக உயர்ந்து விட்டதாகவும், தொடர்ந்து உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் குறிப்பிட்டார்.
இந்தப் பிரச்சனையெல்லாம் நவரத்தினக் கல் மோதிரம் அணிந்ததால் வந்ததே என்று அவர்கள் இருவரிடமும் விளக்கிக் கூறிய நான், மீண்டும் அதுபோன்ற மோதிரங்களை அணியாதீர்கள் என்று அறிவுறுத்தி அனுப்பினேன்.
எனவே, செவ்வாய், சுக்கிரன் வலுவாக இல்லாதவர்கள் நவரத்தினக் கல் மோதிரத்தை அணிவதை தவிர்த்து விட வேண்டும். செவ்வாய், சுக்கிரன் வலிமையாக உள்ளவர்கள் கூட ஓப்பன் செட்டிங் மோதிரத்தை அணியக் கூடாது.

காமத்தை அடக்க என்ன செய்ய வேண்டும்?
ஒருவரது ஜாதகத்தில் 3ஆம் இடம் இச்சைக்குரியதாக கொள்ளப்படுகிறது. இதில் இச்சை என்ற வார்த்தைக்கு காமம் என்று மட்டும் பொருள் கொள்ளக் கூடாது. ஒரு சிலருக்கு பணத்தின் மீது இச்சை இருக்கும். மற்றொருவருக்கு உணவுப் பண்டங்களின் மீது இச்சை இருக்கும். சிலருக்கு தங்கள் தொழில் மீது இச்சை இருக்கும். உடல் இச்சையும் இதில் அடங்கும்.
பொதுவாக 3வது வீட்டில் நல்ல கிரகங்கள் இருப்பது சிறப்பான பலனைத் தரும். ஆனால் 6வது, 8வது, 12வது வீட்டிற்கு உரிய கிரகங்கள் 3இல் அமர்ந்திருந்தால் தினசரி உடலுறவு கொள்ளக் கூடிய நிலை அல்லது ஒரே நாளில் பலமுறை உறவு கொள்ளும் எண்ணத்தை அது ஏற்படுத்தும். இவர்களுக்கு லக்னாதிபதி சரியாக இருந்து விட்டால் இந்த எண்ணங்களை ஒழுக்க நெறிகள் மூலம் அவர்கள் கட்டுப்படுத்துவர்.
எனவே, 3வது வீட்டில் ஒருவருக்கு என்ன கிரகம் உள்ளது என்பதைப் பார்ப்பதுடன், லக்னாதிபதி யாருடன், எந்த வீட்டில் இருக்கிறார் என்பதையும் பார்க்க வேண்டும். ஏனென்றால் உடல், அழகு, எண்ண ஓட்டங்கள் ஆகியவற்றை நிர்ணயிப்பது லக்னாதிபதி.
காம இச்சை அதிகம் உடையவர்கள் இந்தக் கோயில் வழிபாடு அல்லது பரிகாரங்களை மேற்கொண்டால் பலன் கிடைக்கும் என்று பொதுவாகக் கூறிவிட முடியாது. அவரவர் ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புகளைக் கொண்டு தனிப்பட்ட முறையில் பரிகாரங்களை வகுக்க வேண்டும்.
லக்னாதிபதி பலவீனமாக, மறைந்து பாவ கிரகங்களுடன் சேர்ந்திருந்தால் முரண்பாடான இச்சைகள் மனதில் தோன்றும். உடலுறவில் திருப்தியற்ற நிலை ஏற்படும். மனைவியைப் பொறுத்த வரை கணவருக்கு போதுமான இன்பம் கொடுத்திருப்பார். ஆனால் கணவருக்கு அதனால் மனத்திருப்தி ஏற்படாமல் போகலாம். இதனால் சபலம் ஏற்பட வாய்ப்புள்ளது.
காம உணர்வும் யோகமும்!
புகைப் பிடித்தல், மது அருந்துதல் தவிர்த்து இன்னுமோர் அபாயமிருக்கிறது, அது காம விருப்பு சம்பந்தமானது. யோகம் தனது தூய்மையாக்கும் வேலையைச் செய்யும் போது உன்னிடம் பதுங்கிக் கிடக்கும் வேகங்களையும் ஆசைகளையும் மேலுக்கு எறிகின்றது. நீ விஷயங்களை ஒளிக்காமலும், ஒதுக்கிவைக்காமலும் இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். நீ அவைகளைச் சந்தித்து, வென்று, அவைகளுக்குப் புது உருவம் தரவேண்டும்.
யோகத்தின் முதற்பயன் என்னவெனில் மனத்தின் ஆதிக்கம் தளர்ந்துவிடுகிறது. உள்ளே உறங்கிக் கிடக்கும் வேட்கைகள் திடீரென விடுதலையடைந்து குப்பென்று கிளம்பி ஆதாரத்தை ஆக்கிரமிக்கின்றன. மனத்தின் ஆதிக்கம் இருந்த இடத்தில் இறைவனின் ஆட்சி ஸ்தாபிக்கப்படாத வரையில் ஓர் இடைநிலை ஏற்படுகிறது. அதுசமயம் உனது நேர்மையும் சரணமும் சோதனைக்குட்படும்.
காம உணர்ச்சி போகன்ற வேகங்களின் பலமானது சாதாரணமாக ஜனங்கள் அவைகளின் மீது அதிகமாகக் கவனம் செலுத்துவதிலிருந்தே வருகின்றது. அவர்கள் அவைகளை மிக அழுத்தமாக மறுத்து பலவந்தமாகக் கட்டுப்படுத்தவும் உள்ளே அமுக்கிவிடவும் முயல்கின்றனர். ஆனால் ஒன்றை நினைத்துக்கொண்டே, "அது எனக்கு வேண்டாம், அது எனக்கு வேண்டாம்" என்று சொல்லிக்கொண்டு போனால் நீ அதற்குப் பந்தப்பட்டுப் போகிறாய். நீ செய்ய வேண்டியது என்னவெனில், அதை உன்னிடமிருநூது சிலக்கி, அதனுடைய உறவு வைத்துக்கொள்வதை நிறுத்தி, கூடுமானவரை அதைக் கவனிக்காமல் இருந்துவிட வேண்டும். நீ அதை நினைக்க நேரிட்டாலும் அசட்டையாயும் கவலையில்லாமலும் இருந்துவிட வேண்டும்.
யோகத்தின் நெருக்கத்தினால் மேலே கிளம்பிவரும் வேகங்களும் ஆசைகளும் உனக்கு அந்நியமாயும் புறஉலககைச் சேர்ந்தவையாயும் இருப்பவைபோலக் கருதி அவைகளைப் பற்றற்ற நோக்குடனும் அமைதியுடனும் நீ சந்திக்க வேண்டும். இறைவன் அவற்றை எடுத்துக்கொண்டு உருமாறுதல் செய்யும் பொருட்டு அவற்றை இறைவனுக்கே அர்ப்பணம் செய்துவிட வேண்டும்.
உதிக்கும் போது விதிக்கப்பட்டது என்ன?
ஒரு குழந்தை பூமியில் பிறக்கும் போது உள்ள கிரக அமைப்புகள், இவனுக்கு/இவளுக்கு இதுதான் என்று நிர்ணயித்து விடுகின்றன. படிப்பு இவ்வளவுதான், மனைவி இப்படித்தான், சாப்பாடு இவ்வளவுதான் என உதிக்கும் போதே விதிக்கப்பட்டு விடுகிறது.
எனவே உதிக்கும் போது நமக்கு விதிக்கப்பட்டது என்ன என்பதை (வாழ்க்கை சூட்சுமம்) அறிந்து அதற்கு ஏற்றவாறு வாரிசுகளுக்கு வாழ்க்கைத் துணையை பெற்றோர் அமைத்துத் தர வேண்டும். நம்மிடம் 10 வீடு உள்ளது, 25 பேருந்து ஓடுகிறது என்ற வகையில் அந்தஸ்து பார்த்து திருமணம் செய்து வைத்தால் சிறப்பாக இருக்காது.
ஏனென்றால் மகனின் ஜாதகத்தில் மனைவி ஸ்தானம் பலவீனமாக இருந்தால் ஏழைக் குடும்பம், 10ஆம் வகுப்பு படித்த பெண்ணை மணமுடித்தால்தான் அவரது வாழ்க்கை இறுதிவரை சிறப்பாக இருக்கும்.
உதாரணமாக, சிலருக்கு ஈனப் பெண்ணுடன் (படிப்பு, அந்தஸ்து, வசதி குறைந்த) வாழ வேண்டும் என்ற கிரக அமைப்பு உள்ளவர்களும் இருக்கிறார்கள். மிகவும் உயர்ந்த அந்தஸ்தில் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த, சிவில் சர்வீஸ் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து வெற்றி பெற்ற ஒருவர், குறத்தி இனத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
மேலும், அப்பெண் குறத்தி இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், கஷ்டப்பட்டு படித்து அரசு உத்தியோகத்தில் உள்ளார். பல பெண்களைப் பார்த்தும் மனதில் திருமண ஆசை தோன்றாத சிவில் சர்வீஸ் அதிகாரிக்கு, குறத்தி இனத்தைச் சேர்ந்த அப்பெண்ணை கண்டதும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என தோன்றியுள்ளது.
அவர் இதுகுறித்து என்னிடம் கேட்கும் முன்பாகவே அவரது ஜாதகத்தை நான் (சிவில் சர்வீஸ் தேர்வின் போது) பார்த்துள்ளேன். அப்போதே அவருக்கு தகுதி, அந்தஸ்து, படிப்பு குறைவான பெண்தான் மனைவியாக வருவார் என்று தெரியும்.
திருமணம் குறித்து அவர் பலமுறை கேள்வி எழுப்பியும், புன்சிரிப்பை மட்டுமே பதிலாக அளித்தேன். அவரும் முயன்றவரை முயற்சித்துப் பார்த்தார். இப்போது திருமணத்திற்கு என்ன அவசரம், முதலில் சிவில் சர்வீஸ் தேர்வை வெற்றிகரமாக முடியுங்கள் என்று சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தேன்.
கால சர்ப தோஷத்திற்கு பரிகாரம் என்ன?
சர்ப தோஷத்திற்கு பரிகாரம் செய்வதற்கு காளஸ்திக்கு செல்கிறார்கள். இதுபோல கால சர்ப தோஷத்திற்கு பரிகாரம் செய்வதற்கு என்று தலம் ஏதாவது இருக்கிறதா?
கால சர்ப தோஷத்திற்கு என்று குறிப்பிடும்படி எதுவும் கிடையாது. கால பைரவரை வழிபட்டாலே போதும். (நாயை வளர்த்தாலே போதும். கால பைரவர் வாகனம்). உலகிலேயே சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் ஒரு சன்னதி இருக்கிறது. அங்கு ஒரு சிவாலயம் இருக்கிறது. அந்த பைரவர் வாகனத்தோடு, நாயோடு இல்லாமல், அமர்ந்த நிலையில் தவக்கோலத்தில் இருப்பார் கால பைரவர். அவரை வழிபட்டால் இந்த கால சர்ப தோஷத்திற்கு பரிகாரம் கிடைக்கும். பொதுவாக கால சர்ப தோஷத்திற்கு குலதெய்வ வழிபாடு, பிறகு மனதளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வது, ஆதரவற்றவர்களுக்கு உதவுவது என்றெல்லாம் செய்தாலே கால சர்ப தோஷத்திற்கு பலன் கிடைக்கும்.
கால சர்ப தோஷம் என்பது என்ன? காலத்தால் மறுக்கப்பட்டவர்கள். காலம் கை கொடுக்காமல் கைவிடப்பட்டவர்கள். இதை எதிர்த்து நின்று மேலே வருகிறவர்கள் இருக்கிறார்களே அவர்களுக்கு 39 வயதிலிருந்து மிகவும் உச்சமாக இருக்கும். உச்சத்திற்கு வருவார்கள். ஆனால் அதுவரைக்கு உண்டு இல்லை என்று ஆக்கும். குறிப்பாக 26 வயது வரை ஒரு வழியாக்கிவிடும். 26இல் இருந்து 38 வயது வரை ஓரளவிற்கு பரவாயில்லை, ஒரு சிலதெல்லாம் கிளியராகும். ஆனால், 39இல் இருந்து 46 வயது வரை அதிகப்படியான உயர்வைத் தரும்.
எனவே கால சர்ப தோஷம் இருப்பவர்கள் கால பைரவரை வணங்குவது நல்லது.
உணவுப் பழக்கம் என்பது பல்வேறு உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தக் கூடிய விடயமாக நமது நாட்டில் கருதப்படுகிறது. உதாரணமாக, துறவிகள், பூசாரிகள், சன்னியாசிகள் ஆகியோர் சாத்வீக (உப்பு, காரம் இல்லாத) உணவுகளை உட்கொள்கின்றனர். அந்த உணவின் மூலம் உடல் இயக்கத்திற்கு தேவையான சக்தி கிடைக்கும் என அவர்கள் கூறுகின்றனர்.
ஆனால், கடுமையான விரதப்போக்குடன் வாழக்கூடிய பூசாரிகள், சன்னியாசிகளில் ஒரு சிலர் காம லீலைகளில் ஈடுபட்டதாக சிக்கிக் கொள்கின்றனர். இது ஏன்?
பதில்: உடல் நலனை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாக உணவு திகழ்கிறது. ஆனால் உணவின் மூலமாக மட்டுமே ஒருவருக்கு காம எழுச்சி ஏற்படுவதில்லை. இந்த விடயத்தில் மனித மனத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
ஒருவரின் ஜாதகத்தில் லக்னாதிபதி, ராசிநாதன் ஆகிய இரண்டின் நிலையையும் பார்க்க வேண்டும். லக்னாதிபதி, ராசிநாதன் ஆகிய இருவரும் நன்றாக இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் அந்த கிரகங்களின் தசை நடக்கும் போது அவர்கள் பாதை மாறி காம லீலைகளில் ஈடுபட நேரிடும். எனவே, உணவுப் பழக்கத்தால் மட்டுமே காம இச்சையை குறைத்து விட முடியும் என்று எண்ணக் கூடாது.
வெங்காயம், பூண்டு, அசைவ உணவுகள் ஆகியவற்றைத் தவிர்த்து பாதி உப்பு, பாதி காரத்தில் மட்டும் சாப்பிட்டால் காம இச்சை முற்றிலுமாக அடங்கிவிடாது. மனதைக் கட்டுப்படுத்துவதற்கும் சில பயிற்சிகளைச் செய்ய வேண்டும். அதற்கு மனோகாரகன் (சந்திரன்) ஒருவரின் ஜாதகத்தில் நன்றாக இருக்க வேண்டும்.
ஜோதிடத்தில் சந்திரனை பலவீனப்படுத்தும் கிரகங்களும் உள்ளன. அதுபோன்ற கிரகங்களின் தசை நடக்கும் போது சம்பந்தப்பட்டவர் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.
இதேபோல் 3, 6, 8, 12க்கு உரியவர்களின் தசை நடக்கும் போது பொதுவாகவே காம இச்சை அதிகரிக்கும். அதுபோன்ற காலத்தில் சம்பந்தப்பட்டவர் தன்னை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். அதை விடுத்து மனம் போன போக்கில் காம லீலைகளில் ஈடுபட்டால் சிறை தண்டனை, அவமானம் ஆகியவற்றை ஏற்க நேரிடும்.
காம இச்சை அடக்க முடியாத நிலையில் உள்ளவர்களுக்கு, பொதுவான பரிகாரம் ஏதாவது உள்ளதா?
இந்த விஷயத்தைப் பொறுத்தவரை பொதுவான பரிகாரம் என எதையும் கூற முடியாது. சம்பந்தப்பட்டவரின் ஜாதகத்தை முழுமையாகப் பார்த்த பின்னரே அவருக்கான பரிகாரத்தைக் கூற முடியும்.
உதாரணமாக, 3, 6, 8, 12க்கு உரியவர்களின் தசை நடக்கும் போது அவருக்கு ஏழரைச் சனி நடந்தால், அவர் எப்படி வாழ்ந்தாலும் காம இச்சைகள் தொடர்பான விவகாரங்களில் சிக்கிக் கொள்வார்.
ஒரு சிலர் சொந்த ஊரில் இருந்தால் தானே பிரச்சனை என்று மனதில் நினைத்துக் கொண்டு, அண்டை மாநிலத்திற்கும், அயல்நாடுகளுக்கும் சென்று தங்கள் இச்சைகளைத் தீர்த்துக் கொள்கிறார்கள். இதனால் அவர்கள் விதியிடம் இருந்து தப்பமுடியாது. மாறாக உடல்நலனைக் கெடுத்துக் கொள்கிறார்கள். இதுவும் ஒரு வகையில் அவர்களுக்கு தண்டனையாகவே கருதப்படும்.
எனவே, அதுபோன்ற மோசமான தசை நடக்கும் போது மனதை அடக்க தியானம் செய்வதே சிறந்தது என சில நூல்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இன்றைய நிலையில் தியானம் என்றால் என்னவென்றே பலருக்கு தெரியவில்லை. அதுபோன்றவர்கள் கடுமையான உடற்பயிற்சி, பயணம் மேற்கொள்ளலாம்.
உடற்பயிற்சிக்காக தனியாக நேரம் ஒதுக்க முடியாதவர்கள் அன்றாடப் பணிகளின் மூலம் தனது வேலைப்பளுவை அதிகரித்துக் கொள்ளலாம். தோட்டம் அமைக்கலாம், உளவாரப் பணிகளை மேற்கொள்ளலாம். இதனால் அவர்களுடைய உடலில் ஏற்படும் இச்சைகளும், மனதில் ஏற்படும் மாசுகளும் குறையும்/மறையும்.
ஒரு சிலர் ஆலயத்திற்கு உள்ளேயே தவறான காரியங்களில் ஈடுபடுகிறார்களே? என்று பலர் கேட்கலாம். எந்த வகையான உடல் உழைப்பும் இன்றி விதவிதமான உணவு வகைகளை உட்கொள்வதால் அவர்களுக்கு காமஇச்சை அதிகரித்து வழிதவறி இருக்கிறார்கள்.
எனவே, உடலை வருத்தி உழைத்து, ஏழை, எளிய மக்களுக்கு பயன்படும் விதத்தில் சில பணிகளை மேற்கொண்டால் மனம் தெளிவுபெறும். அதுமட்டுமின்றி காமம் நிலையானது அல்ல என்பதை சம்பந்தப்பட்டவர்கள் மனதளவில் உணர வேண்டும்.
அதனை உணர முடியாதவர்கள் மருத்துவமனைக்கு சென்று நோயாளிகளுக்கு சில பணிவிடைகளைச் செய்வதுடன், அவர்கள் படும் அவஸ்தைகளை பார்த்தால் உடல் நிலையற்றது என்ற எண்ணம் அவர்கள் மனதில் ஆணித்தரமாக பதிவாகிவிடும்
பெருமாள் ஆதிக்க கிரகம் என்று வரும்போது புதன், சனி, சுக்ரன் இதெல்லாம் வருகிறது. வைணவ கிரகம் என்று புதனைக் குறிப்பிடலாம். சைவக் குடும்பமாக இருக்கும். அந்தக் குடும்பத்தில் ஒரு பையன் பெருமாள் கோயிலிற்குத்தான் விரும்பிப் போகிறான், சொன்னாலும் பிரதோஷத்திற்குப் போகமாட்டேன் என்கிறான் என்று சொல்வார்கள். புதன் ஆதிக்கத்தில் அவர் பிறந்ததிருக்கிறார். புதன் திசை வேறு நடந்து கொண்டிருக்கிறது. அதனால் அவரை வற்புறுத்தாதீர்கள், அவர் பெருமாள் கோயிலிற்கே போகட்டும் என்று சொன்னேன்.
இதெல்லாம் என்னவென்றால், அந்த கிரகங்களுடைய ஆதிக்கம் பெற்ற, அந்த கிரங்களை ஆளும் தன்மை கொண்ட இறைவன் இருக்கும்போது இந்த மாதிரி இருக்கும். சூரிய திசை, சனி திசை என்று சொல்வார்கள். சூரிய திசையில் நிறைய பேருக்கு சிவ ஆதிக்கம் இருக்கும். திருவாசகம், தேவாரம் படிக்காமல் சாப்பிடவே மாட்டார்கள். அதுவே சந்திர திசை வரும் போது கொஞ்சம் குறையும். அபிராமி அந்தாதி படிக்கிறாருங்க என்று சொல்வார்கள். இதுவே செவ்வாய் திசை வரும்போது, என்னவென்று தெரியவில்லை கந்த சஷ்டி கவசம் படிக்கிறார்னு சொல்வார்கள். இதற்குதான் தசா புத்தி என்று சொல்கிறோம். இந்த தசா புத்தி வரும்போது காரமாக சாப்பிடுவது, குரு இருந்தால், இனிப்புகளைத் தேடித் தேடி சாப்பிடுவது இதெல்லாம் இருக்கும். இவர்களே அடுத்து சனி திசைக்கு வந்தால் இனிப்பு வேண்டாம், எதாவது காரமாக இருந்தால் கொடு என்று கேட்டு சாப்பிடுவார்கள். இந்த மாதிரி அவர்களுடைய புத்தி மாறுகிறது.
இதுபோன்று உணவு மாறும் போது, உடை மாறும் போது உள்ளத்தில் வணங்குகிற தெய்வம் - இப்ப இந்த அவதாரத்தைப் பிடிக்கிறது. இதை வணங்குவோம் - என்று மாறுகிறார்கள். இது முழுக்க முழுக்க கோள்களினுடைய ஆதிக்கம். அதனுடைய தாக்கம்தான்.
சாப்பாடு என்று வரும்போது, ராகு என்றால் வருத்தது, பொறித்தது. வாயில் போட்டால் மொறு மொறு என்று சத்தம் வரவேண்டும். ஆஃப் பாயில், பாஸ்ட்·புட் இதெல்லாமும் ராகுதான். மற்றபடி, குறிப்பிட்ட கிழமைகளில் அசைவம் சாப்பிடாமல் இருப்பதென்பதெல்லாம் ஒரு பழக்கத்தின் பார்ப்பட்டதே.

மிதுன ராசிக்காரர்களுக்கு யோகாதிபதி சனி பகவான் என்று கூறியுள்ளீர்கள். சனி பகவான் சங்கட பகவான்தானே?
எல்லா கிரகங்களும், எல்லோருக்கும் நல்லது செய்யும் என்று அர்த்தம் கிடையாது. மேஷ லக்னம், மேஷ ராசியாக இருந்தால் அவர்களுக்கு குரு பகவான் யோகாதிபதி. ஆனால் ரிஷப லக்னம், ரிஷப ராசியாக இருந்தால் குரு பகவான் யோகாதிபதி கிடையாது.
பொதுவாக குரு என்பது சுப கிரகம். அவ்வளவுதான். அதேபோல, பொதுவாக சனி என்பது பாவ கிரகம். ஆனால், ஒரு ராசிக்கு யோகாதிபதியாகவும், இன்னொரு ராசிக்கு பாவ கிரகமாகவும் வருவார். ராசி, லக்னத்தைப் பொறுத்து இப்படி வித்தியாசப்படுகிறது. ரிஷப ராசிக்கு சனி ஒருவரே மேலான லாபத்தைப் பெற்றுத் தரக்கூடியவர். இதை, பல அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்களுடைய ஜாதகத்தைப் பார்த்து தெரிந்து கொண்டிருக்கிறோம்.
நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த ஒருவர் அதே நிறுவனத்தின் முதலாளியாக ஆகியிருக்கிறார், சனி திசையில். இதுபோன்ற அமைப்பையெல்லாம் பார்த்திருக்கிறோம். ரிஷப ராசி, மிதுன ராசி, கன்னி ராசி, துலாம், மகரம், கும்பம் இவர்களுக்கெல்லாம் சனி பிரதான கிரகம். இவர்தான் இவர்களுடைய தலையெழுத்தை நிர்ணயிக்கக்கூடியவர். இவர் நன்றாக இருந்து, அந்த திசையும் வந்துவிட்டால், ஒன்றுமில்லாத நிலையில் இருந்து பெரிய நிலைக்கு வந்துவிடுவர்.
அதாவது, தெருக்கோடியில் நின்றவர் பல கோடிக்கு அதிபதியாகிவிட்டார் என்று சொல்வார்களே அதுமாதிரி. இதுபோன்று நடைமுறையில் நாங்கள் பார்த்து வியக்கிறோம். சனி கொடுக்க ஆரம்பித்துவிட்டால் அதை யாராலும் தடுக்க முடியாது. சனி கொடுக்க ஆரம்பித்துவிட்டால் சங்கரனாலும் தடுக்க முடியாது என்று ஒரு பழமொழி கூட உண்டு. அவ்வளவு விஷயங்கள் சனி பகவானுக்கு உண்டு.

முன்கூட்டியே அறியும் சக்தி உண்மையா?
Tamil Astrology: ஏதாவது ஒரு நல்லது, கெட்டது நடைபெறுவதற்கு முன்பு சிலருக்கு சில அறிகுறிகள் தெரியும் அல்லது சில நிகழ்வுகள் அவர்களுக்கு நடக்கும் என்று கூறுவது உண்மையா? அது எப்படி ஏற்படுகிறது?
ஒவ்வொரு ஜாதகத்திலும் லக்னத்திற்கு 5ஆம் இடம் பூர்வ புண்ணியம் என்று சொல்வார்கள். அந்த பூர்வ புண்ணியஸ்தானத்தில் சுப கிரகங்கள் அமர்ந்திருந்தால் ஒரு இன்டியூஷன் பவர் (உள்ளுணர்வு சக்தி) அவர்களுக்கு உண்டு. சங்க கால நூல்களில் பார்த்தீர்களானால் நிமித்தம், அசரீரி என்றெல்லாம் சொல்வார்கள்.
உதாரணத்திற்கு, அவர் வெளியில் வந்தார் உடனே காக்கை வடமிருந்து இடமாகப் போய்விட்டது. அதனால் அவர் திருப்தியில்லை என்று சொல்லிவிட்டார். அதனால் அந்த வேலையை அப்படியே விட்டுவிட்டார். சில நிமித்தங்களையும் நாம் பார்க்க வேண்டும். நிமித்தங்களைப் பார்த்துப் பார்த்து பழக்கப்பட்டாலேயே நமக்கு இன்டியூஷனெல்லாம் வர ஆரம்பிக்கும்.
நிமித்தங்கள் என்று எதைக் குறிப்பிடுகிறோம்?
நிமித்தங்கள் என்பது சகுனங்கள் என்று சொல்வோமே அதுதான். அறிகுறி. "தும்மலில் போனாலும் தூறலில் போகாதே". தூறல் என்பது ஒரு நிமித்தம். தூறலில் போகக்கூடாது. தூறலில் போனால் தொல்லை உண்டு. அதை நாம் கடைபிடிக்க வேண்டும். 5ஆம் இடத்தில் வகித்திருந்தால் இன்டியூஷன் உண்டு. அவர்களுக்கு சாதாரணமாகவே தோன்றும். உட்கார்ந்து ஜோதிடர் மாதிரி கணக்கு போட்டு அவர்கள் சொல்ல வேண்டாம். எனக்கென்னமோ திடீரென்று தோன்றுகிறது என்று சொல்வார்கள்.
சில பெண்கள், மிகவும் தெய்வீகமாக, யாருக்கும் கெடுதல் செய்யாமல், நாத்தனார், மாமியார் என எல்லோரையும் அனுசரித்துப் போகிற பெண்மணிகளெல்லாம் சட்டென்று சொல்லிவிடுவார்கள், இது சரியில்லை என்று. யாரையாவது வீட்டிற்கு சாப்பாட்டுக்கு அழைத்துச் செல்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவர்களைப் பார்த்து, நீங்கள் பார்ப்பதற்கே சரியாகயில்லையே, கொஞ்சம் தள்ளியே இருங்கள் என்று சொல்லிவிடுவார்கள். அதனால் பெரும் பிரச்சனையே உருவாகிவிடும். இப்படியெல்லாம் உண்டு.

கிரகங்களுக்கும், உணவு பழக்கத்திற்கும் தொடர்பு உண்டா?
பெருமாளுக்காக சனிக்கிழமைகளில் அசைவு உணவுகளை சாப்பிடுவதில்லை என்று கூறுகின்றனர், சிலர் வெள்ளிக்கிழமைகளில் சாப்பிடுவதில்லை, ஆனால் ஞாயிற்றுக்கிழமைகளில் பெரிய அளவில் அசைவம் சாப்பிடுவார்கள். இதெல்லாம் பழக்க வழக்க முறைகளில் பண்பாட்டால் வந்ததா? இல்லையென்றால், இந்தந்த நாட்களில் கிரகங்களுடைய ஆளுமை அதிகமாக இருக்கிறது, அந்த குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட அசைவ உணவுகளை சாப்பிட்டால் ஜீரணம் நன்றாக இருக்கும் என்ற அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறதா?
பெருமாள் ஆதிக்க கிரகம் என்று வரும்போது புதன், சனி, சுக்ரன் இதெல்லாம் வருகிறது. வைணவ கிரகம் என்று புதனைக் குறிப்பிடலாம். சைவக் குடும்பமாக இருக்கும். அந்தக் குடும்பத்தில் ஒரு பையன் பெருமாள் கோயிலிற்குத்தான் விரும்பிப் போகிறான், சொன்னாலும் பிரதோஷத்திற்குப் போகமாட்டேன் என்கிறான் என்று சொல்வார்கள். புதன் ஆதிக்கத்தில் அவர் பிறந்ததிருக்கிறார். புதன் திசை வேறு நடந்து கொண்டிருக்கிறது. அதனால் அவரை வற்புறுத்தாதீர்கள், அவர் பெருமாள் கோயிலிற்கே போகட்டும் என்று சொன்னேன்.
இதெல்லாம் என்னவென்றால், அந்த கிரகங்களுடைய ஆதிக்கம் பெற்ற, அந்த கிரங்களை ஆளும் தன்மை கொண்ட இறைவன் இருக்கும்போது இந்த மாதிரி இருக்கும். சூரிய திசை, சனி திசை என்று சொல்வார்கள். சூரிய திசையில் நிறைய பேருக்கு சிவ ஆதிக்கம் இருக்கும். திருவாசகம், தேவாரம் படிக்காமல் சாப்பிடவே மாட்டார்கள். அதுவே சந்திர திசை வரும் போது கொஞ்சம் குறையும். அபிராமி அந்தாதி படிக்கிறாருங்க என்று சொல்வார்கள். இதுவே செவ்வாய் திசை வரும்போது, என்னவென்று தெரியவில்லை கந்த சஷ்டி கவசம் படிக்கிறார்னு சொல்வார்கள். இதற்குதான் தசா புத்தி என்று சொல்கிறோம். இந்த தசா புத்தி வரும்போது காரமாக சாப்பிடுவது, குரு இருந்தால், இனிப்புகளைத் தேடித் தேடி சாப்பிடுவது இதெல்லாம் இருக்கும். இவர்களே அடுத்து சனி திசைக்கு வந்தால் இனிப்பு வேண்டாம், எதாவது காரமாக இருந்தால் கொடு என்று கேட்டு சாப்பிடுவார்கள். இந்த மாதிரி அவர்களுடைய புத்தி மாறுகிறது.
இதுபோன்று உணவு மாறும் போது, உடை மாறும் போது உள்ளத்தில் வணங்குகிற தெய்வம் - இப்ப இந்த அவதாரத்தைப் பிடிக்கிறது. இதை வணங்குவோம் - என்று மாறுகிறார்கள். இது முழுக்க முழுக்க கோள்களினுடைய ஆதிக்கம். அதனுடைய தாக்கம்தான்.
சாப்பாடு என்று வரும்போது, ராகு என்றால் வருத்தது, பொறித்தது. வாயில் போட்டால் மொறு மொறு என்று சத்தம் வரவேண்டும். ஆஃப் பாயில், பாஸ்ட்·புட் இதெல்லாமும் ராகுதான். மற்றபடி, குறிப்பிட்ட கிழமைகளில் அசைவம் சாப்பிடாமல் இருப்பதென்பதெல்லாம் ஒரு பழக்கத்தின் பார்ப்பட்டதே.
வெற்றி தரும் விபரீத ராஜயோகம்
பூர்வ புண்ய அதிபதி , பாக்யாதிபதி இவர்கள் குளத்தில் உள்ள மீனைப் போன்றவர்கள்! ஆகவே இவர்கள் எந்த பாவத்தில் அமர்ந்தாலும் , அந்த ஸ்தான பாவத்தில் உள்ள அழுக்குகளை அதை தூய்மை செய்து விடுவார்கள் ! 5 ம் அதிபதி 6 ம் ஸ்தானத்தில் அமர்ந்தால் , 6 ம் பாவக தீய பலன்கள் வெகுவாக குறையும் . நோய் உண்டானாலும் உடன் குணமாகும் . எதிர்ப்பு ஏற்பட்டாலும் அது உடனே மறையும் . கடன் இருப்பினும் அவை அதிகம் தொல்லை தராது எனலாம் .
ஆனால் 6 , 8 , 12ம் அதிபதிகள் ஒரு அறையில் உள்ள மூட்டைப் பூச்சியைப் போன்றவர்கள் . இவர்கள் எங்கே அமர்ந்தாலும் அந்த ஸ்தானத்திற்கு கடும் தொல்லையைக் கொடுப்பவர்கள் எனலாம் .
ஆக தொல்லையை கடுமையாக கொடுக்கும் இந்த துஷ் ஸ்தான அதிபதிகள் , தொல்லைகள் செய்யும் ஸ்தானங்களில் அமரும் நிலை உண்டானால் அதுவே வெற்றி தரும் விபரீத ராஜயோகமாகும் . இதையே தமிழ் சாஸ்திரம் 'கெட்டவன் கெட்டிடில் கிட்டும் ராஜயோகம் ' எனச் சொல்கிறது .
1 . மேஷம்
Tamil Astrology: செவ்வாய் ( 8 ம் அதிபதி ), 6 ல் அமர்ந்தால் ,குறைந்த அளவே நல்ல பலன்களை உண்டாகும் .செவ்வாய் ,புதனோடு ( ஆறாம் அதிபதி ) 6,8 12 ல் அமர்ந்தால் மன அமைதியை கொஞ்சம் பாதிக்கும் . நோயைக் தரலாம் .குரு (பனிரெண்டாம் அதிபதி) மத்திம பலனை 12 ல் ஆட்சியில் அமர தரலாம் .12 ல் புதன் நல்ல பலன் செய்யும் .குரு ,செவ்வாய் 8 அல்லது 12 ல் அமர நல்ல பலனை எதிர்பார்க்கலாம் .புதன் 6 ல் அமர குருவின் பார்வை பெற்றால் நல்ல ராஜயோகமே!
2 . ரிஷபம்
Tamil Astrology: சுக்கிரன் ( 6 ம் அதிபதி ) 8 அல்லது 12 ல் அமர நன்மை . 8 ல் குரு ( எட்டாம் அதிபதி ) அமர ராஜ யோகம் செய்தாலும் , புத்திரபாக்கியம் , குடும்ப சுகம் ,இவைகளை பங்கம் செய்யும் .
குருவும் ,சுக்கிரனும் 6 ,8 ,12 ல் இணைந்து அமர்வது அதிகம் ரிஷப லக்னத்திற்கு நன்மையில்லை .செவ்வாய் திசைக்காலத்தில் கடன் தொல்லையை உண்டாக்கி விடும் .
3 . மிதுனம்
Tamil Astrology: சனி ( எட்டாம் அதிபதி ) தனித்து 6,8,12 ல் அமர்வது ,அதே போல் சனியும் ,சுக்கிரனும் (பனிரெண்டாம் அதிபதி) 6,8,12 ல் அமர்வது அதிகம் நன்மையில்லை .குறிப்பாக ஏட்டில் அமர்வது கடும் தீய பலன்களைச் செய்யும் .
சுக்கிரன் தனித்து 8,12 ல் அமர்வது நன்மையே .செவ்வாய் (6 ம் அதிபதி) தனித்து 6,8,12 ல் அமர நன்மையே .எட்டாம் அதிபதி சனியுடன் இணைந்து அமர்வது மத்திம பலன் செய்யும் . செவ்வாயும் , சுக்கிரனும் 12 ல் அமர்ந்து சனியின் பார்வை பெறுவது நல்ல யோகமே ! எட்டில் சுக்கிரன் ,செவ்வாய் ,புதன் இணைவதும் பிரபல ராஜயோகம் செய்யும்.
4 . கடகம்
Tamil Astrology: சனி( எட்டாம் அதிபதி ) 6 ல் அமர நன்மையில்லை .குரு (6 ம் அதிபதி ) மற்றும் புதன் ( 12 ம் அதிபதி ) இவர்களின் இணைவு 6,8,12 ல் அமர்வது நன்மையில்லை ! குரு + சனி இவர்கள் இணைவது நன்மையே ! அதே போல் புதன் 6,8,12 ல் அமர்வது நல்ல பலன் செய்யும் .குரு + சனி 6,8 ல் அமர்வது சில சமயம் நல்ல பலன் அமையும் .
5 . சிம்மம்
Tamil Astrology: சனி (ஆறாம் அதிபதி ) 6,8 ல் அமர்வது நன்மை அதிகம் இல்லை .குருவின் பார்வை பெற்றால் நல்ல பலன் உண்டு .குரு 6,8,12 ல் அமர்வது நன்மையே செய்யும் .சந்திரன் (பனிரெண்டாம் அதிபதி) 12 ல் ஆட்சி பெறுவதும் நன்மை செய்யும் . அதே போல் சனி , சந்திரன் இணைவு துஷ் ஸ்தானங்களில் உண்டாவது நன்மையே செய்யும் .சந்திரன் ( 6 ல் -மகரம் ) ,சனி பனிரெண்டில் (கடகம்) அமர பரிவர்த்தனை பெறும் யோகம் சனி மகா திசைக் காலத்தில் நன்மை செய்யும்
6 . கன்னி
Tamil Astrology: செவ்வாய் (8 ம் அதிபதி) 6,8 அமர்வது தீய பலன் செய்யும் . பனிரெண்டில் ,சிம்மத்தில் அமர ஏற்ற ,இறக்கமான வாழ்க்கை உண்டாகும் . சனி ( 6 ம் அதிபதி ) 12 ல் அமர மத்திம பலனைச் செய்யும் எனலாம் .சூரியன் ( 12 ம் அதிபதி ) ,செவ்வாய் பரிவர்த்தனை அல்லது 6 ல் சனி ,12 ல் சூரியன் ஆட்சி பெறுவதும் மத்திம பலன் செய்யும் .சனி , செவ்வாய் 12 ல் அமர்வது நல்ல யோகமே!
7 . துலாம்
Tamil Astrology: சுக்கிரன் (எட்டாம் அதிபதி) எந்த துஷ் ஸ்தானத்தில் (6,8,12 ல் ) அமர்ந்தாலும் நன்மை செய்யலாம் . இதேபோல் புதன் ( பனிரெண்டாம் அதிபதி )+ குரு ( ஆறாம் அதிபதி ) இவர்களும் 6,8,12 ல் அமர நன்மை அமையும் . இம் மூன்று துஷ் ஸ்தான அதிபதிகளுக்குள் உண்டாகும் பரிவர்த்தனை நிலையும் நல்ல யோகம் செய்யும் அமைப்பே!
8 . விருச்சிகம்
Tamil Astrology: செவ்வாய் (6 ம் அதிபதி ) 6,8 ல் நிற்பது மத்திம பலன் ! புதன் (எட்டாம் அதிபதி) 6 மற்றும் 12 ல் நிற்பது பலன் நன்மையாக இல்லை .அதே போல் செவ்வாயும் ,புதனும் இணைவு பெற்று 6,8,12 ல் நிற்பதும் நல்ல பலன் தராது எனலாம் .சுக்கிரன் (விரயாதிபதி) 6,12 ல் நிற்பது நல்ல பலன் செய்யும் .ஆனால் சுக்கிரன் ,புதன் இணைவு 6,8,12 ல் அமைவது தீமையே . புதன் தனித்து 12 ல் அமர நன்மையான யோகமே . சுக்கிரன் ,செவ்வாய் எட்டில் இணைய பொருளாதாரம் செழிப்பாக அமையும் .புதன் -செவ்வாய் பரிவர்த்தனையும் நன்மை செய்யும் .
9 . தனுசு
Tamil Astrology: 6 ம் அதிபதி சுக்கிரன் . 8 ம் அதிபதி சந்திரன் .12 ம் அதிபதி செவ்வாய்.இதில் செவ்வாய் அல்லது சுக்கிரன் 6,8,12 ல் அமர்வது நல்ல யோகம் செய்யும் .சந்திரன் 6,8 ல் நிற்பதை விட 12 ல் நீசமாகி அமர்வது நல்ல யோகம் செய்யும் .12 ல் செவ்வாய்+சந்திரன் இணைவும் நன்மை செய்யும் எனலாம் . இரண்டில் சந்திரன் (மகரம்) நிற்க , அதை செவ்வாய் எழில் நின்று பார்ப்பது நன்மையே .
10 . மகரம்
Tamil Astrology: 6 ம் அதிபதி புதன் . 8 ம் அதிபதி சூரியன் .12 ம் அதிபதி குரு ஆவார்கள் .இதில் சூரியன் தனித்து 6,8,12 ல் நிற்பது நன்மை செய்யாது.சுரியனுடன்,புதனும் இணைந்து இங்கே நிற்பது நல்ல யோகம் செய்யும் .புதன் தனித்து 6 ல் நிற்பதை விட 8,12 ல் நிற்பது நன்மை செய்யும் .குரு + புதன் இணைவு 6,12 ல் மட்டும் நன்மை ,8 ல் இணைவது சிறப்பல்ல ! சூரியன் ,புதன் ,குரு இணைவு 6 , 12 மட்டுமே நன்மை .செவ்வாய் 6 ல் நிற்க பனிரெண்டில் குரு நின்று பார்ப்பது நன்மை செய்யும் எனலாம்.
11 . கும்பம்
Tamil Astrology: 6 ம் அதிபதி சந்திரன் . 8 ம் அதிபதி புதன் . பனிரெண்டாம் அதிபதி சனி .இதில் சந்திரன் 6,12 ல் நிற்பது தீமையே .8 ல் நிற்கலாம் . சனி ,சந்திரன் 6,8,12 ல் உண்டாவதும் நல்ல பலன்களைத் தடை செய்யும். சனி 6 ,12 ல் நிற்பது நன்மையே .புதன் 12 ல் நன்மை .புதன் இரண்டில் அமர எட்டில் சனி நின்று பார்ப்பது நன்மை .
12 . மீனம்
Tamil Astrology: சனி 12 ம் அதிபதி 6 , 12 ல் அமர உள்ள நிலை உன்னதமே .எட்டில் சனி தடை ,தாமதம் செய்யும் .சூரியன் 6 ல் நிற்பது நல்ல பலன் . 8,12 ல் நிற்பது மத்திம பலனே ! சுக்கிரன் 8 ல் நிற்பது சிறப்பு . 6 ,12 ல் நிற்பது நோய் ,தடை இவை உண்டாக்கும் . சனியும் ,சுக்கிரனும் இணைவது மிகவும் நன்மை செய்யும் .
இவை எல்லாம் பன்னிரு லக்னங்களின் துஷ் ஸ்தான அதிபதிகளை தொடர்பைக் குறித்து சொல்லப்பட்டவை .இவ்வகை அமைப்பே விபரீத ராஜ யோகம் செய்யும் .
இந்த துஷ் ஸ்தான அதிபதிகளின் 8,12 ம் அதிபதிகளை விட 6 ம் அதிபதி மிகவும் தீமை செய்பவர் அல்ல! இது உபஜெய ஸ்தானம் அல்லவா! ஆகவே 6 ம் அதிபதியும் ,பாக்கிய ஸ்தான அதிபதியான ஒன்பதாம் அதிபதியும் பரிவர்த்தனை பெறுவதும் நல்ல ராஜ யோகமே .
ஒரு நன்மையான பாவாதிபதியும் ,ஒரு தீமையான பாவாதிபதியும் பரிவர்த்தனையில் அமையும் முதல் தர ராஜ யோகம் இது . ஆனாலும் 6 ம் அதிபதி ஒரு நல்ல கிரகம் அல்ல என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும் . ஏழாம் அதிபதியுடன் இணைவு எனில் திருமணம் சம்பந்தமான சிக்கல்களை உண்டாக்கும் .நான்காம் அதிபதியுடன் இணைவு எனில் வண்டி,வாகனம் ,வீடு ,மனை இவைகளின் வில்லங்கம் உண்டு பண்ணும் .ஒன்பதாம் அதிபதியுடன் இணைந்தால் ( பரிவர்த்தனை அல்ல ) அயல்நாடு சம்பந்தமான விஷயங்களில் சிக்கல்களை உண்டு பண்ணும் .
இந்த 6,8,12 ம் அதிபதிகளால் உண்டாகும் யோக நிலையை பலதீபிகை சாஸ்திரம் இன்னும் தெளிவாகச் சொல்கிறது . 6,8,12 ம் அதிபதிகள் பன்னிரண்டு பாவங்களில் எங்கே அமர்ந்தாலும் , அக்கிரகத்தை இயற்கை பாவக்கிரகங்கள் பார்க்கவே ,இணையவோ செய்தல் உண்டாகும் யோகங்களைச் சொல்கிறது .இவ்வகை கிரக நிலை 1. அவயோகம் , 2. நிஸ்வா யோகம் ,3. மிருத்யோகம் ,4. குகூ யோகம் ,5. பாமர யோகம் ,6. துர் யோகம் ,7. தரித்திர யோகம் ,8. ஹர்ஷ யோகம் ,9. துஷ் கீர்த்தி யோகம் ,10. சரள யோகம் ,11. நிர் பாக்ய யோகம் ,12. விமல யோகம் ,என வகைப்படுகிறது .இதில் (6) ஹர்ஷ யோகம் என்பது நன்மை செய்யும் யோகம் .
இதன்படி 6 ம் அதிபதி 6,8,12 ஆகிய ஏதேனும் ஒரு துஷ் ஸ்தானத்தில் அமர ,6 ம் ஸ்தானத்தை இயற்கை பாவ கிரகம் பார்க்கவோ ,அமரவோ வேண்டும் .இதனால் ஜாதகர் வாழ்வில் மகிழ்ச்சி ,நல்ல எதிர்காலம் ,ஸ்திரமான தொழில் எதிரிகளை எளிதில் வெற்றி பெறல் ,பாவச் செயல் மனம் அச்சப்பட்டு நேர்மையான வாழ்வு அமையும்.
8 ம் யோகமான சரள யோகம் ,8 ம் அதிபதி ,துஷ் ஸ்தானங்களில் ஏதேனும் ஒன்றில் அமர ,எட்டாம் ஸ்தானத்தை இயற்கை பாவக் கிரகம் பார்க்கவோ,இணையவோ வேண்டும் .இதன் படி ஜாதகருக்கு நீண்ட ஆயுள் ,தைரியம்,மரியாதை ,முன்னேற்றம் , கல்வி இவை உண்டு .வியாபார வெற்றி ,புத்திர மகிழ்வும் உண்டு .
12 ம் யோகமான விமல யோகம் 12 ம் அதிபதி ,துஷ் ஸ்தானங்களில் ஏதேனும் ஒன்றில் அமர ,பனிரெண்டாம் ஸ்தானத்தை இயற்கை பாவக்கிரகம் பார்க்க ,அமர வேண்டும் .இதன் படி ஜாதகர் சிக்கனமான செலவு செய்து அதிக சேமிப்பு செய்வார் எல்லோருக்கும் நல்லவராக அமைவார் .சுதந்திரமாக செயல்பட்டு எல்லோரின் மதிப்பை யும் பெறுவார் .
பொதுவாக 6,8,12 ம் அதிபதிகள் துஷ் ஸ்தான அதிபதிகள் .ஆனாலும் அவர்கள் நிற்கும் ஸ்தான ,இணையும் கிரகம் ,இவற்றை பொறுத்து நன்மை,தீமை அமையும்.
நாம் பூர்வஜென்மத்தில் என்ன பாவம் மற்றும் புண்ணியம் செய்துள்ளோமோ அதற்குத் தக்கபடித்தான் இச்ஜென்மத்தில் நாம் நற்பலன் மற்றும் கெடுபலன்களை அனுபவிக்க முடியும்.எனவே நாம் எப்பொழுதும் நல்லதே நினைப்போம்.நல்லதே நடக்கும்.
wonderful explanations.Easy to understand. Update often,I am eager to know more on this.
ReplyDeleteif I give my time and date of birth and place, be you good enough to answer som astrology question, if payment is to be mad please inform me veluoslo@gmail.com
ReplyDeleteHello sir, I am praveen, my request is about job, because i lost my job last june currently an unemployee, so kindly what is the reason, here i attach Dob,Lob and Tob 25 march 1986, Coimbatore, 11:18 am
ReplyDeleteHi pravin we has analysed your chat during present time an raghu dasa is going on & saturn also not faiver for you.That a reason you are unemployed now.
ReplyDeletekindly do below bharikara for get the better job soon.
1.Go to the Durga(Amman) temple in the evening preferably between 3 to 4.30 PM on Tuesdays and take out the black cloth containing black gram dhall (Whole) and put it into the lamp containing sesame oil/ghee. Light up the lamp.
2.Take oil bath early on the Saturday morning and make gingelly oil deepam for saniswara.
Hi sir,
ReplyDeleteI read your post it's very useful to all. I request about my unwilling to work. I want to resolve it from
astrology i share my details please give any solution.
My name is vimal kumar my date of birth is 06-09-1990 9.00 am in cheranmahadevi.
Hi Jothibasu Sir,
ReplyDeleteYour information was very useful to me, My name is murugan, I'm trying for Goverment Jobs since more than 4 years and writing exams continuously but even getting sufficient marks also im not able to get any govt job, Kindly guide me...my details are below.
DOB- 22-12-1986,(MARGAZHI MONTH,MONDAY NIGHT AFTER 7 PM), BIRTH PLACE - Thiyagadurgam (Kallakurichi t.k, Villupuram D.t)